'விமான நிலையத்தில் வேலை' - போலி விளம்பரங்கள் - திருச்சி விமானநிலைய இயக்குநர் எச்சரிக்கை

திருச்சி விமான நிலையத்தில் வேலை' என போலியான நிறுவனங்கள் வெளியிடும் விளம்பரங்கள் மூலம் மோசடி நடைபெறுவதாக, அதன் இயக்குநர் குணசேகரன் எச்சரித்துள்ளார்.
'விமான நிலையத்தில் வேலை' - போலி விளம்பரங்கள் - திருச்சி விமானநிலைய இயக்குநர் எச்சரிக்கை
Published on

திருச்சி விமான நிலையத்தில் வேலை' என போலியான நிறுவனங்கள் வெளியிடும் விளம்பரங்கள் மூலம் மோசடி நடைபெறுவதாக, அதன் இயக்குநர் குணசேகரன் எச்சரித்துள்ளார். விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த விளம்பரங்களை நம்பி ஏராளமானோர் பணத்தை இழந்துள்ளதாகவும், எனவே நம்ப வேண்டாம் என கூறினார். விமான நிலைய ஆணையம் எந்த தனியார் நிறுவனத்தின் மூலம் ஆள் தேர்வு செய்வதில்லை என்றும், நாளிதழ்களிலும் விளம்பரம் செய்வதில்லை என்றும் அவர் கூறினார். எனவே, நாளிதழ் நிறுவனங்கள் தங்களிடம் உறுதிப்படுத்தி கொண்டு விளம்பரங்களை வெளியிட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com