சேலம் மத்திய மாவட்டத்தை `Top’ லிஸ்டில் வரவைத்த DMK தொண்டர்கள் - பாராட்டி விருந்து வைத்த அமைச்சர்

x

சேலம் மத்திய மாவட்டத்தை `Top’ லிஸ்டில் வரவைத்த DMK தொண்டர்கள் - பாராட்டி விருந்து வைத்த அமைச்சர்

தொண்டர்களுக்கு அசைவ விருந்து வழங்கிய சுற்றுலாத்துறை அமைச்சர் ஓமலூரில் சுற்றுலாத்துறை அமைச்சர் திமுக தொண்டர்களுக்கு அசைவ விருந்து வைத்த நிகழ்வு நடைபெற்றது. சேலம் மத்திய மாவட்ட திமுக தொண்டர்கள் புதிய உறுப்பினர் சேர்க்கையில் சிறப்பாக செயல்பட்டதை கொண்டாடும் விதமாக இந்த விருந்து வழங்கப்பட்டது. . கடந்த மாதம் வரை நடைபெற்ற திமுக புதிய உறுப்பினர் சேர்க்கையில், சேலம் மத்திய மாவட்டம் முதல் 5 இடங்களுக்குள் வந்ததால், தொண்டர்களுக்கு மட்டன், சிக்கன் என விதவிதமாக உணவு பரிமாறப்பட்டது. 1000க்கும் மேற்பட்ட தொண்டர்கள் சாப்பிடும் வரை சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் நின்று கவனித்த விதம் தொண்டர்களை மகிழ்ச்சியடைய வைத்தது.


Next Story

மேலும் செய்திகள்