DMK vs TVK | திமுக நிர்வாகி, தவெக தொண்டர் இடையே கைகலப்பு

DMK vs TVK | திமுக நிர்வாகி, தவெக தொண்டர் இடையே கைகலப்பு

திமுக நிர்வாகி, தவெக தொண்டர் மோதல் நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் அருகே, முதலமைச்சர் விஜய்க்கு பேனர் வைப்பது தொடர்பாக திமுக மற்றும் தவெகவினரிடையே மோதல் ஏற்பட்டது வட்டூர் பகுதியில் வைக்கப்பட்டிருந்த பேனர் மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டது. இது தொடர்பாக திமுக ஒன்றிய செயலாளர் வட்டூர் தங்கவேலுக்கும், தவெக தொண்டர் கந்தசாமிக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. இந்த மோதலில் காயமடைந்த திமுக நிர்வாகி தங்கவேல், தனியார் மருத்துவமனையிலும், தவெக தொண்டர் தங்கராசு அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து மல்லசமுத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com