நடுரோட்டில் வைத்து திமுக மாணவர் அணி அமைப்பாளருக்கு சரமாரி வெட்டு - திருவாரூரில் அதிர்ச்சி
நடுரோட்டில் வைத்து திமுக மாணவர் அணி அமைப்பாளருக்கு சரமாரி வெட்டு - திருவாரூரில் அதிர்ச்சி
திமுக மாணவர் அணி அமைப்பாளரை அரிவாளால் வெட்டிய மர்ம கும்பல்
மன்னார்குடி அருகே பட்டப்பகலில் திமுக மாணவர் அணி அமைப்பாளரை மர்ம கும்பல் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே நீடாமங்கலம் ஒன்றிய திமுக மாணவர் அணி அமைப்பாளரான ஹெச். அகமது ஜும்மா என்பவரை, நடுரோட்டில் முகமூடி அணிந்த நான்கு நபர்கள் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர். ரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்ட அகமது ஜும்மாவிற்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது சம்பந்தமாக மன்னார்குடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய நபர்களை தேடி வருகின்றனர்.
Next Story
