

எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் பகுதியில் துவங்கி தாளமுத்து நடராசன் மாளிகை வரை அனைத்து பேரணியும் நடப்பது வழக்கம்.
ஆனால் திமுகவின் இன்றைய பேரணி தாளமுத்து நடராஜன் மாளிகையில் துவங்கி சில பாதை மாற்றங்களுடன் ராஜரத்தினம் ஸ்டேடியம் சென்றடைந்தது.
தாளமுத்து நடராஜன் மாளிகை அருகே பேரணியை ஸ்டாலின் துவங்கியது ஏன் என்பது குறித்து புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
பேரணி துவங்கிய உடனேயே கூவம் கரையோரமாக குறுகிய பாதையில் பல்லாயிரக்கணக்கானோர் பேரணியாக செல்வதில் சிக்கல் எழும் என்பதாலும்,
பேரணி முடிந்தவுடன், மேடை அமைத்து தலைவர்கள் பேசுவதற்கு ராஜரத்தினம் ஸ்டேடியம் எதிரே உள்ள சாலையே சிறந்தது என்றும் முடிவு செய்யப்பட்டது.
மேலும், பேரணிக்கு காவல்துறை அனுமதி இல்லாத சூழலில், தாளமுத்து நடராசன் மாளிகையில் இருந்து துவங்குவதே பாதுகாப்பு என்று திமுக தலைமை கருதியதே இதற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.