DMK | PMK| திமுக பெண் நிர்வாகி மீது சரமாரி தாக்குதல் - தீயாய் பரவிய வீடியோவால் சிக்கிய பாமகவினர்
DMK | PMK| திமுக பெண் நிர்வாகி மீது சரமாரி தாக்குதல் - தீயாய் பரவிய வீடியோவால் சிக்கிய பாமகவினர்
திமுக பெண் நிர்வாகி மீது பாமகவினர் தாக்குதல் தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே, தேர்தலின்போது வாக்கு சேகரிக்கச் சென்ற திமுக பெண் நிர்வாகியை பாமகவினர் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாசிக்கவுண்டனூர் கிராமத்தைச் சேர்ந்த அமுதா, திமுக மகளிர் அணி நிர்வாகியாக உள்ளார். கடந்த வாரம் தேர்தலின்போது அவர் வாக்கு சேகரிப்பில் இருந்தபோது, அமுதாவை சுற்றிவளைத்த 11-க்கும் மேற்பட்ட பாமகவினர் அவரை கொடூரமாக தாக்கியுள்ளனர். மேலும், அவரது ஆடையை கிழித்து மானபங்கம் செய்ததாகவும் கூறப்படுகிறது. பாமகவினரால் கொடூரமாக தாக்கப்பட்ட அமுதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் தாக்கப்பட்ட வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
