

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தி.மு.க தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டார். எந்த தொலைபேசி எண்ணில் இருந்து அழைப்பு வந்தது என்பதை கொண்டு போலீசார் விசாரணை நடத்தியதில், அந்த நபர் பிடிபட்டுள்ளார். விசாரணையில், அந்த நபர் கண்ணாபேட்டையை சேர்ந்த கூலி தொழிலாளி கணேசன் என்பதும், மது போதையில் மிரட்டல் விடுத்ததும் தெரியவந்துள்ளது.