"அவதூறு பரப்பும் பா.ஜ.க. தொழில் நுட்பப் பிரிவு" - நடவடிக்கை கோரி தி.மு.க எம்.எல்.ஏ. புகார்

சென்னை மயிலாப்பூர் காவல் துணை ஆணையாளர் அலுவலகத்தில் மதுரை மத்திய தொகுதி தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் பி.டி. ஆர். பழனிவேல் தியாகராஜன் புகார்
"அவதூறு பரப்பும் பா.ஜ.க. தொழில் நுட்பப் பிரிவு" - நடவடிக்கை கோரி தி.மு.க எம்.எல்.ஏ. புகார்
Published on

தன்னைப்பற்றி பா.ஜ.க. தகவல் தொழில் நுட்பப் பிரிவு அவதூறு பரப்புவதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சென்னை மயிலாப்பூர் காவல் துணை ஆணையாளர் அலுவலகத்தில் மதுரை மத்திய தொகுதி தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் பி.டி. ஆர். பழனிவேல் தியாகராஜன் புகார் அளித்துள்ளார். மதுரை காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சொந்தமான இடத்தை, தி.மு.க. பிரமுகர் அபகரித்து உள்ளதாகவும், அதில் தனக்கு தொடர்பு உள்ளதாகவும் தமிழக பா.ஜ.க. டிவிட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டு உள்ளதாக அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com