கோயம்பேடு வணிகர்கள் மீது பழி போடுவதை முதலமைச்சர் நிறுத்திக் கொள்ள வேண்டும் - திமுக தலைவர் ஸ்டாலின்

கோயம்பேடு வணிகர்கள் மீது பழி போடுவதை முதலமைச்சர் நிறுத்திக் கொள்ள வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கோயம்பேடு வணிகர்கள் மீது பழி போடுவதை முதலமைச்சர் நிறுத்திக் கொள்ள வேண்டும் - திமுக தலைவர் ஸ்டாலின்
Published on

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஆயிரம் ரூபாயோடு அனைத்தும் முடிந்துவிட்டது என்று நினைக்காமல், திசை திருப்பும் அறிவிப்புகளை தவிர்த்து விட்டு, 5 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவி வழங்கிட முன்வர வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

தற்போது தமிழகத்தில் சமூகத் தொற்றை எதிர்கொண்டிருக்கிறோமோ என்ற ஆபத்தான சூழலில், அதற்குப் பொதுமக்கள் மீதும் வணிகர்கள் மற்றும் தொழிலாளர்கள் மீதும் பழிபோட்டுத் தப்பிக்க நினைப்பதாக குற்றம்சாட்டி உள்ளார்.

திடீர் முடிவுகளால், அரசு தான் மக்களைத் திக்குமுக்காட வைத்து, நெருக்கடிக்கு உள்ளாக்கி உள்ளதாகவும்,

அதுவே நோய்த்தொற்றுக்குக் காரணமாக அமைந்து விட்டது என்பதை மறைப்பதற்காக, ஊரடங்கு விதிகளை மக்கள் கடைபிடிக்கவில்லை என பழி போட முயற்சி செய்வதாகவும், ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.

முன்கூட்டியே திட்டமிட்டு மேற்கொள்ளத் தவறிய அரசின் நிர்வாக அலட்சியமே நோய்த்தொற்று பரவுதலுக்கு அடிப்படைக் காரணம் என்றும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com