"தமிழகத்தின் 10 ஆண்டு தொலைநோக்கு திட்டம்" - மு.க.ஸ்டாலின்

தமிழகத்தின் அடுத்த 10 ஆண்டுக்கான தொலைநோக்கு பார்வை திட்டத்தை வருகிற 7ஆம் தேதி வெளியிட உள்ளதாக மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழகத்தின் அடுத்த 10 ஆண்டுக்கான தொலைநோக்கு பார்வை திட்டத்தை வருகிற 7ஆம் தேதி வெளியிட உள்ளதாக மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தொலைபேசி வாயிலாகவும், ஊடகம் வாயிலாகவும் பிறந்தநாள் வாழ்த்து கூறியவர்களுக்கு நன்றி தெரிவித்தார். திருச்சியில் 7ஆம் தேதி பொதுக்கூட்டம் நடைபெற உள்ளதாகவும், அதில் திமுகவின் லட்சிய பிரகடனத்தை வெளியிட உள்ளதாக அறிவித்தார். இதற்கான ஆவணத்தை 20 நாட்களில் 2 கோடி மக்களிடம் கொண்டு சேர்க்க உள்ளதாக ஸ்டாலின் குறிப்பிட்டார்.

X

Thanthi TV
www.thanthitv.com