4 திமுக பொறுப்பாளர்கள் கட்சியில் இருந்து நீக்கம் - துரைமுருகன் அதிரடி நடவடிக்கை

உசிலம்பட்டி நகர்மன்றத் தலைவர் தேர்தல் கட்சித் தலைமையை மீறி செயல்பட்டதாகக் குற்றச்சாட்டு

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகர்மன்றத் தலைவர் தேர்தலில் கட்சியின் மீறி செயல்பட்டதாக 4 திமுக பொறுப்பாளர்களை தற்காலிக நீக்கம் செய்து திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார். உசிலம்பட்டி நகர்மன்றத் தலைவர் தேர்தலில் கட்சியால் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் செல்விக்கு எதிராக மற்றொரு திமுக வேட்பாளர் சகுந்தலா போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில், உசிலம்பட்டி நகர செயலாளர் தங்கமலைப்பாண்டி, ஒன்றிய செயலாளர் சுதந்திரம், மாநில செயற்குழு உறுப்பினர் சோலை ரவி, நகர இளைஞரணி செயலாளர் சந்திரன் உள்ளிட்ட 4 பேரும் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டதாக கூறி கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com