DMK | திமுக குறித்து அவதூறாக பேசியதால் வாக்குவாதம் முற்றி ஒருவர் கொலை

திமுக குறித்து அவதூறாக பேசியதால் வாக்குவாதம் முற்றி ஒருவர் கொலை சென்னை விருகம்பாக்கத்தில் திமுகவை பற்றி அவதூறாக பேசியதால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். விருகம்பாக்கத்தை சேர்ந்த நண்பர்கள் ராஜேந்திரன் மற்றும் கருணாகரன். திமுக உறுப்பினராக உள்ள ராஜேந்திரனிடம் அக்கட்சி குறித்து கருணாகரன், அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, ஒரு கட்டத்தில் திமுக உறுப்பினர் ராஜேந்திரனை, கருணாகரன் தாக்கியுள்ளார். பதிலுக்கு திமுக உறுப்பினர் ராஜேந்திரன் தான் வீட்டில் வைத்திருந்த கத்தியை எடுத்து வந்து கருணாகரனை குத்தி கொலை செய்தார். இந்நிலையில் ராஜேந்திரனை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com