நிலத்தை திமுக நிர்வாகி அபகரிக்க போலீஸ் உடன் வந்ததாக கூறி, மாடி மேல் ஏறி நின்று பெண் தற்கொலை மிரட்டல் விடுத்த பரபரப்பு வீடியோ வெளியாகி உள்ளது. நாமக்கல் மாவட்டம் மோகனூர் பகுதியை சேர்ந்த வளர்மதி என்பவர் பெட்ரோல் பங்க் வைத்து நடத்தி வருகிறார். தனது 2 ஏக்கர் நிலத்தை அடமானம் வைத்து 25 லட்சம் பணம் பெற்ற நிலையில், மோசடியாக நிலத்தை கிரையம் செய்து திமுக நிர்வாகி நிலத்தை அபகரிக்க முயற்சிப்பதாக அப்பெண் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அப்பெண் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், நீதிமன்றத்தின் அனுமதியின்றி எவ்வாறு நிலத்தை கையகப்படுத்த வந்தீர்கள் என அப்பெண் சரமாரியாக கேள்வி எழுப்பினார்.இதுகுறித்து திமுகவின் நாமக்கல் கிழக்கு விவசாய அணி செயலாளர் கைலாசம் மற்றும் அரசு வழக்கறிஞர் முத்துசாமி ஆகியோர் அப்பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.