வேலூரில், சைக்கிள் ஸ்டாண்ட் ஏலப் பிரச்சினை தொடர்பாக, திமுக பிரமுகர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. காட்பாடியை சேர்ந்த ரங்கராஜன், வேலூர் திமுகவில் மாநகர வர்த்தக அணி துணை அமைப்பாளராக பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில், சைக்கிள் ஸ்டாண்ட் ஏலம் எடுப்பது தொடர்பாக ரங்கராஜன் மற்றும் திமுகவை சேர்ந்த மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சுனில்குமார் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ரங்கராஜன் மற்றும் அவரது மனைவி, கடந்த 17ஆம் தேதி ஏலப்பிரச்சனை தொடர்பாக சுனில் குமார், வீட்டிற்கு வந்து தாக்கியதாகவும், உரிய நடவடிக்கை எடுக்கக்கோரியும் எஸ்பி அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.