காவேரி மருத்துவமனை முன்பு திரண்டுள்ள திமுக தொண்டர்கள்...

கருணாநிதியின் உடல் நலத்தில் பின்னடைவு ஏற்பட்டதும், நேற்று மாலை முதல் சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து திமுக தொண்டர்கள் மருத்துவமனை முன்பு குவியத் தொடங்கினர்.

கருணாநிதியின் உடல் நலத்தில் பின்னடைவு ஏற்பட்டதும், நேற்று மாலை முதல் சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து திமுக தொண்டர்கள் மருத்துவமனை முன்பு குவியத் தொடங்கினர். "எழுந்து வா தலைவா... "அறிவாலயம் போகலாம் வா தலைவா" என கண்ணீர் மல்க தொடர்ந்து முழக்கமிட்டபடியே இருந்தனர்.

இந்நிலையில், இன்று அதிகாலை முதலே தொண்டர்கள் மருத்துவமனை முன்பு குவிந்து வருகின்றனர். கருணாநிதி உடல்நிலை தேறி மீண்டும் தங்களை சந்திப்பார் என்ற நம்பிக்கை அவர்களது முகத்தில் தெரிகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com