"சமூக நீதியை நிலைநாட்டியது கிறிஸ்தவ கல்வி நிலையங்களே" - அப்பாவு, சட்டப்பேரவைத் தலைவர்
திராவிட சித்தாந்தத்தை ஊட்டி சமூக நீதியை நிலைநாட்டியது கிறிஸ்தவ கல்வி நிலையங்கள்தான் என சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
திராவிட சித்தாந்தத்தை ஊட்டி சமூக நீதியை நிலைநாட்டியது கிறிஸ்தவ கல்வி நிலையங்கள்தான் என சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார். நெல்லை பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், தமிழ்நாட்டில் பட்டதாரி இல்லாத வீடுகளே இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது என்றார். இந்த சமூதாயத்தில் திராவிட சித்தாந்தத்தை ஊட்டி, சமூக நீதியை நிலைநாட்டி அனைவரும் கல்வி பயிலலாம் என்ற நிலையை ஏற்படுத்தியது கிறிஸ்தவ கல்வி நிலையங்கள்தான் என்றும் அப்பாவு கூறினார்.
