திமுக, திமுக கூட்டணி கட்சிகள் கூட்டாக அறிக்கை

x

முருக பக்தர்கள் மாநாட்டை எதிர்த்து திமுக, திமுக கூட்டணி கட்சிகள் கூட்டாக அறிக்கை

மதுரையில் இந்து முன்னணி சார்பில் ஆர்.எஸ்.எஸ்., பாஜக நடத்தவுள்ள முருக பக்தர்கள் மாநாடு ஒரு ஆன்மிக நிகழ்ச்சி அல்ல. வெறுப்பு அரசியலின் ஒரு பகுதி என்று மதச்சார்பற்ற கட்சிகள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன.

மதுரையைச் சேர்ந்த திமுக, காங்கிரஸ், விசிக மற்றும் இடதுசாரி கட்சிகளின் பிரதிநிதிகள் கூட்டாக வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில், மாநாடு நடத்துபவர்களின் நோக்கம் கடவுள் பக்தி அல்ல, கலவர உத்தியே என்பதை தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள் என்று தெரிவித்துள்ளனர்.

பிள்ளையார் சதுர்த்தி, ராமர் கோவில் போன்ற முயற்சிகள் தமிழகத்தில் எடுபடாததால், தமிழ்க் கடவுள் முருகன் பெயரில் மாய்மாலம் செய்கிறார்கள் என்று அக்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

இந்தித் திணிப்பை ஏற்க மறுத்தால் நிதி மறுப்பது, கீழடி ஆய்வு முடிவுகளை வெளியிட மறுப்பது என தமிழுக்கும், தமிழக மக்களுக்கும் மத்திய பாஜக அரசு துரோகம் செய்வதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

எனவே, முருக பக்தர்கள் மாநாட்டில் நீதிமன்ற நிபந்தனைகளை காவல் துறை உறுதி செய்ய வேண்டும் எனவும், வெறுப்பு அரசியலை விசிறி விடுவதற்காக நடத்தப்படும் மாநாட்டினால் மக்கள் ஒற்றுமை பாதிக்கப்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை காவல்துறை எடுத்திட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்