DMK Alliance | கூட்டணியில் இருந்து விலகியதை பட்டாசு வெடித்து கொண்டாடிய தவாக - காத்திருந்த அதிர்ச்சி
திமுக கூட்டணியில் இருந்து விலகியதை பட்டாசு வெடித்து கொண்டாடியவர்கள் மீது வழக்கு திமுக கூட்டணியில் இருந்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி விலகியதை பட்டாசு வெடித்து கொண்டாடிய சம்பவத்தில், அக்கட்சி நிர்வாகிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நெல்லை மேலப்பாளையம் பகுதியில், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில துணைத்தலைவர் உமர் தலைமையில் நிர்வாகிகள் பட்டாசு வெடித்து கொண்டாடியதாக கூறப்படுகிறது. இது தேர்தல் நடத்தை விதிகளை மீறுவதாக தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் புகார் அளித்தனர். இதையடுத்து அரசு பணியாளர்களின் உத்தரவை மீறுதல், அரசு பணிக்கு தடை ஏற்படுத்துதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் உமர் உள்ளிட்ட நான்கு பேர் மீது மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்
