தி.க. தலைவர் வீரமணியை கைது செய்ய கோரிய வழக்கு தள்ளுபடி

இந்து கடவுள் கிருஷ்ணரை தொடர்புபடுத்தி பேசிய திராவிட கழக தலைவர் வீரமணியை கைது செய்யக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தி.க. தலைவர் வீரமணியை கைது செய்ய கோரிய வழக்கு தள்ளுபடி
Published on
இந்து கடவுள் கிருஷ்ணரை தொடர்புபடுத்தி பேசிய திராவிட கழக தலைவர் வீரமணியை கைது செய்யக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வீரமணியை கைது செய்ய கோரி, பா.ஜ.க நிர்வாகி அசோக் என்பவர் தாக்கல் செய்த மனு, நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய குற்றப்பிரிவு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், வீரமணியின் பேச்சு அடங்கிய வீடியோ யூ டியூப்பில் இருந்து நீக்கப்பட்டு விட்டதாகவும், தற்போது வீரமணியை அழைத்து விசாரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதை பதிவு செய்துகொண்ட நீதிபதி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
X

Thanthi TV
www.thanthitv.com