இன்றைய கால கட்டத்தில், மார்பக புற்றுநோயால் அதிகளவிலான பெண்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். இந்நோய் காரணமாக, ஒரு பக்க மார்பகத்தை இழக்கும் பெண்களுக்கு, தங்களது வயிற்றுப்பகுதி சதையை அறுவை சிகிச்சை மூலம் வெட்டி எடுத்து, மார்பகம் போல பொருத்தும் சிகிச்சை தற்போது பிரபலமாகி வருகிறது.