Diwali | Omni Bus | தீபாவளிக்கு சொந்த ஊர் செல்லும் மக்களுக்கு அதிர்ச்சி

இந்த நிலையில் வரும் 17ஆம் தேதி சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு இயக்கப்படும் ஆம்னி பேருந்துகள் கட்டணம் 3 மடங்கு அதிகரித்துள்ளது.

வழக்கமாக சென்னையில் இருந்து திருநெல்வேலி செல்வதற்கு 1400 முதல் 1800 வரை வசூலிக்கப்படும் கட்டணம் தற்போது 2000 முதல் 5000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதே போல சென்னையில் இருந்து கோயம்புத்தூருக்கு செல்வதற்கு வழக்கமான நாட்களில் 800 முதல் 1200 ரூபாய் வரை வசூலிக்கப்படும் நிலையில் தற்போது 3000 ரூபாயாக உய்த்தப்பட்டுள்ளது.

இதே போல சென்னையில் இருந்து மதுரைக்கு 700 முதல் 1100 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில் தற்போது 4100 ரூபாயாக அதிகரித்துள்ளது.

இதேபோல் நாகர்கோலுக்கு 900 ரூபாயிலிருந்து 4 ஆயிரம் ரூபாயாகவும்

திருச்சி செல்வதற்கு 600 ரூபாயிருந்து 3 ஆயிரத்து 600 ரூபாயாகவும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

X

Thanthi TV
www.thanthitv.com