Diwali | Husband Wife Fight | தீபாவளிக்கு வந்த மாமனார், மாமியாரை உறைய விட்ட மருமகன்

x

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே மனைவியை கழுத்து நெரித்து கொன்று புதைத்த கணவரை, போலீசார் கைது செய்துள்ளனர். கும்மிடிப்பூண்டி அருகே துராபள்ளம் கிராமத்தை சேர்ந்த சிலம்பரசன் - பிரியா தம்பதிக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ள நிலையில், கணவன் மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், தீபாவளிக்கு மகளை காண வந்த பிரியாவின் பெற்றோர், மகள் வீட்டில் இல்லாததால் மருமகனிடம் அதுகுறித்து கேட்டுள்ளனர். அப்போது பிரியாவை கடந்த ஆகஸ்ட் மாதமே கொலை செய்து புதைத்துவிட்டதாக கூறி, சிலம்பரசன் அவர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளார். புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார், உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்