

திருச்சியில் துப்புரவு பணியாளர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருச்சி எம்ஐஇடி கல்லூரி சார்பில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் பங்கேற்று துப்புரவு பணியாளர்களுக்கு புத்தாடை உள்ளிட்ட தீபாவளி பரிசுகளை வழங்கினர்.இந்த நிகழ்ச்சியில் பேசிய மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் ஆயிரம் கோடி ரூபாய் அளவில் பாதாளசாக்கடை, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்த உள்ளதாக தெரிவித்தார்.