பட்டாசு வெடிப்பதற்கு எதிரான வழக்குகள் : உற்பத்தி குறைந்தது என தயாரிப்பாளர்கள் கவலை

பட்டாசு வெடிப்பதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள் காரணமாக, உற்பத்தி குறைந்துள்ளதுடன், விற்பனையும் பாதிக்கப்பட்டுள்ளதாக சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் வேதனை அடைந்துள்ளனர்.
பட்டாசு வெடிப்பதற்கு எதிரான வழக்குகள் : உற்பத்தி குறைந்தது என தயாரிப்பாளர்கள் கவலை
Published on

பட்டாசு வெடிப்பதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள் காரணமாக, உற்பத்தி குறைந்துள்ளதுடன், விற்பனையும் பாதிக்கப்பட்டுள்ளதாக சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் வேதனை அடைந்துள்ளனர். விற்பனைக்கு தடை இல்லை என்ற போதிலும், பல்வேறு கட்டுப்பாடுகளை உச்ச நீதிமன்றம் விதித்துள்ளதால் பட்டாசு உற்பத்தி 40 சதவீதம் குறைந்துள்ளதாகவும், வெடிப்பதற்கான நேரக்கட்டுப்பாடுகள் காரணமாக விற்பனை சரிந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் நவம்பர் 5 ஆம் தேதி பட்டாசு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளதால், பட்டாசு தயாரிப்பு தொடருமா? என்ற அச்சம் உற்பத்தியாளர்களிடையே எழுந்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com