தீபாவளி போனஸ், மாத சம்பளம் வழங்க கோரிக்கை - தனியார் ஒப்பந்த தொழிலாளர்கள் பிச்சை எடுத்து போராட்டம்

தீபாவளி போனஸ், மாத சம்பளம் வழங்க கோரி ஒப்பந்த தொழிலாளர்கள் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தீபாவளி போனஸ், மாத சம்பளம் வழங்க கோரிக்கை - தனியார் ஒப்பந்த தொழிலாளர்கள் பிச்சை எடுத்து போராட்டம்
Published on

500க்கும் மேற்பட்ட தனியார் நிறுவன ஒப்பந்த பணியாளர்கள் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தூய்மை பணிகளை செய்து வருகின்றனர். இந்த நிலையில், ஊழியர்களுக்கு இதுவரை மாத ஊதியம் மற்றும் தீபாவளி போனஸ் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதனையடுத்து ஒப்பந்த தொழிலாளர்கள் மருத்துவமணை வாயிலில் அமர்ந்து பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சம்பளமும் போனஸும் வழங்கும் வரை போராட்டம் தொடரும் என அவர்கள் எச்சரித்துள்ள்னர்

X

Thanthi TV
www.thanthitv.com