தகர கொட்டகையில் இயங்கி வந்த அரசு பள்ளியில் ஆட்சியர் ஆய்வு

பரமக்குடி அருகே தகரக் கொட்டகையில் இயங்கி வந்த தொடக்கப்பள்ளியை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்து, புதிய கட்டடம் கட்ட உடனடி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
தகர கொட்டகையில் இயங்கி வந்த அரசு பள்ளியில் ஆட்சியர் ஆய்வு
Published on

* இராமநாதபுரம் மாவட்டம் பி.வலசை கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளி தகரக் கொட்டகையிலும், தார்ப்பாய் மறைவிலும் செயல்பட்டு வந்தது. இதுகுறித்து தந்தி டிவி செய்தி வெளியிட்டிருந்தது.

* இதையடுத்து சம்பந்தப்பட்ட அரசு தொடக்கப்பள்ளியை மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் நேரில் ஆய்வு செய்தார்.

* பின்னர் தற்காலிகமாக பள்ளியை அங்கன் வாடி கட்டிடத்திற்கு இடமாற்றம் செய்யவும், உடனடியாக புதிய தொடக்கப்பள்ளி கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

* மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து ஆய்வு செய்ததையும், புதிய கட்டிடம் கட்ட உத்தரவிட்டதையும் அடுத்து அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com