திமுக அரசின் சாதனைகள் குறித்த துண்டு பிரசுரம் விநியோகம்
நெல்லை மாவட்டம் களக்காட்டில், திமுக அரசின் நான்கு ஆண்டு சாதனைகளை விளக்கும் துண்டு பிரசுரம் வழங்கும் பெருந்திரள் மக்கள் பிரச்சாரம், களக்காடு தெற்கு ஒன்றிய செயலாளர் பி.சி.ராஜன் தலைமையில் நடைபெற்றது. இதில் களக்காடு தெற்கு ஒன்றிய திமுக செயலாளரும், துணைச் சேர்மனுமான பி.சி.ராஜன் தலைமையில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பெண்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். திமுக அரசின் 4 ஆண்டு சாதனைகளை விளக்கும் துண்டு பிரசுரங்களை வியாபாரிகள், பொதுமக்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் என அனைத்து தரப்பினரிடமும் வழங்கினர். தொடர்ந்து பேசிய பி.சி.ராஜன், மத்திய அரசு நிதி தராமல் வஞ்சித்தாலும், தமிழ்நாட்டிற்கு பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்து வருவதாக குறிப்பிட்டார்.
Next Story
