"பதவி பறிப்பு மசோதா - 75 ஆண்டுகளாக உள்ள சட்டங்கள் பயனற்றவையா?"
"பதவி பறிப்பு மசோதா - 75 ஆண்டுகளாக உள்ள சட்டங்கள் பயனற்றவையா?"
குற்ற வழக்குகளில் கைதாகும் பிரதமர், முதல்வர்கள், ஆளுநர்கள் உள்ளிட்டோரை பதவி நீக்கம் செய்வதற்கான சட்ட மசோதா குறித்து பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் சிவில் நடைமுறை சட்டம் எதற்காக உள்ளன? என கேள்வி எழுப்பி உள்ளார். இது பற்றி டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ ஆகியவை மூலம் அனைவரும் வழக்குகளில் சிக்குகின்றனர். இந்த சட்ட மசோதாவின் மூலம் எதிர்க்கட்சிகளை அச்சுறுத்தவும், பாஜக தனது கூட்டணிக்கு பிற கட்சிகளை வரவழைக்கவும் பார்ப்பதாக குற்றம்சாட்டி உள்ளார். ஏற்கனவே 75 ஆண்டுகளாக உள்ள சட்டங்கள் பயன் அற்றவையா எனவும் மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பியுள்ளார். இந்த சட்ட மசோதாவை நடக்க உள்ள துணை குடியரசு தலைவர் தேர்தலிலும் பயன்படுத்த உள்ளதாகவும் அவர் கூறினார்.
