கோவில் வழித்தடத்தால் ஏற்பட்ட தகராறு - இரு சமூகத்தினர் மோதியதால் பரபரப்பு

நாமக்கல் அருகே கோவில் வழித்தட பிரச்சினையில் இரு சமூகத்தினரிடையே மோதல் உருவானதால் அங்கு பதற்றம் நிலவுகிறது.
கோவில் வழித்தடத்தால் ஏற்பட்ட தகராறு - இரு சமூகத்தினர் மோதியதால் பரபரப்பு
Published on

நாமக்கல் அருகே கோவில் வழித்தட பிரச்சினையில் இரு சமூகத்தினரிடையே மோதல் உருவானதால் அங்கு பதற்றம் நிலவுகிறது. நாமக்கல் அடுத்த பரளியில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான செல்லாண்டியம்மன் மற்றும் வரதராஜ பெருமாள் கோவில்கள் அருகருகே அமைந்துள்ளன. இந்த இரு கோவில்களையும் இருவேறு சமூகத்தினர் நிர்வகித்து வரும் நிலையில், செல்லாண்டியம்மன் கோவில் அருகே உள்ள காலி இடத்தில் போர்வெல் அமைக்கும் பணி நடந்துள்ளது. இதில், இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட, அது மோதலாக மாறியது. இதையடுத்து மோகனூர் தாசில்தார் தலையிட்டு, நிலத்தை அளவீடு செய்து போர்வெல் அமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த பின்னர் நிலை கட்டுக்குள் வந்த‌து.

X

Thanthi TV
www.thanthitv.com