சவாரி எடுப்பதில் தகராறு - ஆட்டோவால் மோதி ஆட்டோ ஓட்டுநர் கொலை
ஸ்ரீவில்லிபுத்தூரில் முன்விரோதம் காரணமாக சக ஆட்டோ ஓட்டுநரை ஆட்டோவால் மோதி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆட்டோ ஓட்டுநர்களான செந்தில்குமார் , பொன்ராஜ் இருவருக்கும் சவாரி எடுப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று முன்பகை காராணமாக செந்தில்குமார் மீது பொன்ராஜ் ஆட்டோவில் பலமாக மோதினார். இதில் தூக்கி வீசப்பட்ட செந்தில்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பொன்ராஜ் மீது போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். முன்பகை காரணமாக ஆட்டோவால் மோதி சக ஆட்டோ ஓட்டுநரை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
