Ramanathapuram | "சொத்தின் மீது வில்லங்கம்"-குடும்பத்துடன் அலுவலகத்தை முற்றுகையிட்ட 80வயது முதியவர்
"சொத்தின் மீது வில்லங்கம்" - மனு அளித்த பிறகும் பத்திரப்பதிவு.. குடும்பத்துடன் அலுவலகத்தை முற்றுகையிட்ட 80 வயது முதியவர்
தனது சொத்தின் மீது வில்லங்கம் இருப்பதால் பத்திரப்பதிவு செய்யக்கூடாது என மனு அளித்த பிறகும் பத்திரப்பதிவு செய்யப்பட்டதை கண்டித்து, 80 வயது முதியவர் தனது குடும்பத்துடன் ராமநாதபுரம் சார் பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த குப்பை பிச்சை என்ற முதியவரின் மூத்த மகள் வழிப் பேரன் தில்லை குமார், அவருக்கு தெரியாமல் ஒரு நிலத்தை பத்திரப் பதிவு செய்ய கையெழுத்து பெற்றதாக தெரிகிறது. இதையறிந்த குப்பை பிச்சை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும், சார் பதிவாளர் அலுவலகத்திலும் மனு அளித்துள்ளார். இருப்பினும், அவருடைய சொத்துகள் வேறு நபர்களுக்கு பத்திரவு செய்யப்பட்டதாக தெரிகிறது. இதனால் கோபமடைந்த முதியவர் குப்பை பிச்சை, தனது மனைவி மற்றும் 2 மகள்களுடன் சார் பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, பத்திரப்பதிவை ரத்து செய்யப்படி, அலுவலர்களிடம் வாக்குவாதம் செய்தார்.
