நகராட்சி கழிப்பிட கட்டணம் தொடர்பாக தகராறு-சரமாரியாக அடித்து கொண்ட காட்சி

x

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில், நகராட்சி கழிப்பிடத்திற்கு கட்டணம் பெறுவது தொடர்பாக

கொடூர தாக்குதல் நடத்தப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. ஆவரங்காடு பகுதியை சேர்ந்த பாலாஜி என்பவர், பெரியார் நகர் பகுதியில் நகராட்சி பொதுக் கழிப்பிடத்தை 3 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் எடுத்துள்ளார். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த பெரியசாமி என்பவர், கழிப்பிட கட்டணத்தை முறையாக தரவில்லை என கூறப்படுகிறது. இதுதொடர்பாக தகராறு ஏற்பட்ட நிலையில்,

கோவில் பகுதி அருகே, இருசக்கர வாகனத்தில் பெரியசாமி வந்தபோது, பாலாஜி உள்ளிட்ட நண்பர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த பெரியசாமி, ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் அடிப்படையில் பள்ளிப்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்