ஜிபேவில் பணம் அனுப்பியதில் தகராறு - நடுரோட்டில் அடிதடி

ஜிபேவில் பணம் அனுப்பியதில் தகராறு - நடுரோட்டில் அடிதடி

சென்னை போரூரில், பெட்ரோல் நிரப்பியதற்கான பணத்தை ஜிபே மூலம் சிறுகச் சிறுக அனுப்பிய இளைஞருக்கும், பெட்ரோல் பங்க் ஊழியருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

300 ரூபாய்க்குப் பெட்ரோல் நிரப்பிய இளைஞர், ஜிபேவில் பணத்தைச் சிறிது சிறிதாக அனுப்பியதாகக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த ஊழியர், பணம் செலுத்திவிட்டுச் சென்ற இளைஞரைத் துரத்திச் சென்று பிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

தொடர்ந்து, இருவரும் சாலையின் நடுவே ஹெல்மட்டைக் கழற்றி ஒருவரையொருவர் சரமாரியாகத் தாக்கிக் கொண்டனர்.

இதையடுத்து, அங்கிருந்த பொதுமக்கள் இருவரையும் சமாதானப்படுத்தி விலக்கினர். இந்தச் சம்பவத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

#chennai #porur #violance #thanthitv

X

Thanthi TV
www.thanthitv.com