சகோதரர்கள் இடையே தகராறு; அண்ணனை கொலை செய்த தம்பி கைது - இரணியல் போலீசார் விசாரணை

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே, அண்ணனை கொலை செய்த தம்பி கைது செய்யப்பட்டார்.
சகோதரர்கள் இடையே தகராறு; அண்ணனை கொலை செய்த தம்பி கைது - இரணியல் போலீசார் விசாரணை
Published on

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே, அண்ணனை கொலை செய்த தம்பி கைது செய்யப்பட்டார். மணக்கரை பகுதியைச் சேர்ந்த நேசமணி என்பவர், மது அருந்தி விட்டு, தனது சகோதரர் அன்பையனுடன் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அன்பையன், கம்பியால் நேசமணியை கடுமையாக தாக்கியதாக தெரிகிறது. இதில் படுகாயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த இரணியல் போலீசார், நேசமணியின் உடலைக் கைப்பற்றி நாகர்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், அன்பையனை கைது செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com