மிட்டாய் வாங்கிக் கொடுத்ததால் விபரீதம்.. வடமாநில இளைஞருக்கு அடி, உதை

மிட்டாய் வாங்கிக் கொடுத்ததால் விபரீதம்.. வடமாநில இளைஞருக்கு அடி, உதை
மிட்டாய் வாங்கிக் கொடுத்ததால் விபரீதம்.. வடமாநில இளைஞருக்கு அடி, உதை
Published on

மிட்டாய் வாங்கிக் கொடுத்ததால் விபரீதம்.. வடமாநில இளைஞருக்கு அடி, உதை

மதுரையில் சிறுமிகளுக்கு மிட்டாய் வாங்கி கொடுத்ததால் அவர்களை கடத்த வந்ததாக நினைத்து வடமாநில இளைஞரை கிராம மக்கள் அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்தனர்.திருமங்கலம் அருகே டி.கல்லுப்பட்டி பகுதியில் வடமாநிலத்தவர்கள் சுற்றித் திரிவதாக கிராம மக்களிடையே செய்தி பரவின. இந்நிலையில் வன்னிவேலம்பட்டி பகுதியில் 25 வயது மதிக்கத்தக்க வட மாநில இளைஞர் ஒருவர் அங்குள்ள சிறுமிகளுக்கு மிட்டாய் கொடுத்துள்ளார். இதனை பார்த்த கிராம மக்கள் அந்த இளைஞர் சிறுமிகளை கடத்த வந்ததாக நினைத்து அவரை கட்டி வைத்து அடித்து உதைத்தனர். பின்னர் போலீசில் அந்த இளைஞரை பொதுமக்கள் ஒப்படைத்தனர். விசாரணையில் வடமாநில இளைஞர் சாப்பிட்டு மூன்று நாட்களானதாகவும் ஊருக்குச் செல்ல வழியில்லாததால் இப்பகுதியை சுற்றி திரிந்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து கல்லுப்பட்டி போலீசார் உணவு வாங்கிக் கொடுத்து, கையில் பணமும் கொடுத்து அனுப்பி வைத்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com