“கல்யாணம் செய்து வைக்க சொல்லி டார்ச்சர்..“ - அண்ணன் மனைவியை வெட்டி கொன்ற கொழுந்தன்
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே அண்ணன் மனைவியை வீடு புகுந்து அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியோடிய கொழுந்தனை போலீசார் தேடி வருகின்றனர். விளாம்பட்டி சேர்ந்த சுரேஷுக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தான நிலையில், தனக்கு மீண்டும் திருமணம் செய்து வைக்குமாறு தந்தையிடமும் அண்ணன் மனைவியிடமும் அடிக்கடி கேட்டு வந்துள்ளார். இந்நிலையில், இது தொடர்பான வாக்குவாதத்தின் போது ஆத்திரத்தில் அரிவாளால் அண்ணன் மனைவியை அவர் வெட்டியதில் சம்பவ இடத்திலேயே சங்கீதா பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
Next Story
