Dindugal | 8ம் வகுப்பு மாணவனை தலைகீழாக கட்டி வைத்து தாக்கிய கும்பல் - திண்டுக்கல்லில் பேரதிர்ச்சி

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே பணத்தை திருடியதாக கூறி பள்ளி மாணவனை கொடூரமாக தாக்கிய கும்பல், தட்டி கேட்க சென்றவர்களையும் அடித்து துரத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. சின்ன அழகுபுரத்தைச் சேர்ந்த எட்டாம் வகுப்பு மாணவனை, அதே பகுதி தினேஷ், மோகன், அருள்மணி ஆகியோர் அழைத்து சென்று 7 ரூபாய் எடுத்ததாக குற்றம் சாட்டி, தலைகீழாக கட்டி தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த மாணவன் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், தட்டிக் கேட்க சென்ற மாணவனின் குடும்பத்தினரையும் தினேஷ் தரப்பினர் தாக்கியுள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com