Dindigul | மாறி மாறி கொடூரமாய் மோதிக்கொண்ட இருதரப்பினர் - 3 பேருக்கு அரிவாள் வெட்டு

Dindigul | மாறி மாறி கொடூரமாய் மோதிக்கொண்ட இருதரப்பினர் - 3 பேருக்கு அரிவாள் வெட்டு

சந்தூர் அருகே நிலத்தகராறில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட‌ மோதலில் வழக்கறிஞர் உட்பட 3 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட‌ சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேடசந்தூர் அருகே உள்ள சோனையகவுண்டன்பட்டியை சேர்ந்த வழக்கறிஞர் முருகேசனுக்கு சொந்தமான கிணற்றை தூர் வாரும் பணியில் நடைபெற்றுள்ளது. அப்போது ராஜேந்திரன் என்பவர் மற்றும் அவரது உறவினர்கள் 15-க்கும் மேற்பட்டோர் கிணற்றை தூர் வார எதிர்ப்பு தெரிவித்து தகராறில் ஈடுபட்டனர். தகராறு முற்றிய நிலையில் அந்த கும்பல் முருகேசனை அறிவாளால் வெட்டியுள்ளனர். தடுக்க வந்த முருகேசனின் உறவினர்களான ஒச்சமாள், கருப்பையா ஆகியோரை கத்தியால் குத்தி, கடப்பாறையால் தாக்கியுள்ளனர். மேலும் முருகேசனின் உறவினர் காரை அடித்து நொறுக்கி கண்ணாடியை உடைத்தனர். இதனால் அந்த விவசாய நிலம் கலவர பூமியாக காட்சியளித்தது. இது குறித்த புகாரின் பேரில் எரியோடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com