Dindigul | TN Rains | மலைப்பாதையில் சாய்ந்த மரங்கள் - போக்குவரத்து பாதிப்பு

Dindigul | TN Rains | மலைப்பாதையில் சாய்ந்த மரங்கள் - போக்குவரத்து பாதிப்பு

Dindigul | TN Rains | மலைப்பாதையில் சாய்ந்த மரங்கள் - போக்குவரத்து பாதிப்பு

திண்டுக்கல் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் கனமழையால், பெரும்பாறை அருகே மலைப்பாதையில் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. இதனால் சுமார் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பெரும்பாறை, தடியன்குடிசை, மஞ்சள்பரப்பு, புல்லாவெளி உள்ளிட்ட மலைக் கிராமங்களில் கடந்த இரண்டு நாட்களாக இரவு, பகலாகத் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில், மஞ்சள்பரப்பு – புல்லாவெளி இடையிலான மலைப்பாதையில் மரங்கள் சாலையின் குறுக்கே விழுந்தன. இதனால் கொடைக்கானல், தாண்டிக்குடி உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்ல முடியாமல் பேருந்து, லாரி, கார் உள்ளிட்ட வாகனங்கள் அணிவகுத்து நின்றன. மலைக் கிராமங்களில் இருந்து திண்டுக்கல், வத்தலகுண்டு உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் வாகனங்களும் பாதிக்கப்பட்டன.

X

Thanthi TV
www.thanthitv.com