மின்வாரிய ஊழியர் தூக்கு போட்டு தற்கொலை...

திண்டுக்கல் மாவட்டம் பழனியில், மின்வாரிய ஊழியர் ஒருவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மின்வாரிய ஊழியர் தூக்கு போட்டு தற்கொலை...
Published on

திண்டுக்கல் மாவட்டம் பழனியில், மின்வாரிய ஊழியர் ஒருவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். தனபால் என்ற அந்த மின் ஊழியர், தனது தாயின் கரும காரியத்திற்காக 2 நாட்கள் விடுமுறை கேட்டதாகவும், கஜா புயல் சீரமைப்பு பணியை காரணம் காட்டி, மேலதிகாரி அவருக்கு விடுமுறை வழங்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த தனபால், வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்கள் கூறுகின்றனர். தற்கொலைக்கான காரணம் குறித்து, அவர் கைப்பட எழுதிய கடிதத்தை, போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com