சப் கலெக்டரின் உதவியாளர் வீட்டில் திடீர் ரெய்டு... ``சிக்கிய முக்கிய ஆவணங்கள்..''
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சார் ஆட்சியரின் உதவியாளர் வீட்டில், லஞ்ச ஒழிப்பு துறையினர் நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2022 முதல் 3 ஆண்டுகள் ஒட்டன்சத்திரம் வட்டாட்சியராக பணியாற்றி வந்த முத்துசாமி என்பவர், தற்போது சார் ஆட்சியரின் நேரடி உதவியாளராக உள்ளார். இந்நிலையில் வருமானத்திற்கு அதிகமாக அவர் சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து, அவர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிந்தனர். தொடர்ந்து, அவரது இல்லத்தில் 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள், 4 மணி நேரத்திற்கும் மேலாக சோதனையிட்டு ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.
Next Story
