

திண்டுக்கல் மாவட்டம் அஞ்சுகுழிப்பட்டி கிராமத்தை சேர்ந்த தனியார் கல்லூரி முன்னாள் ஊழியரான சதீஷ்குமார், கடந்த 12ஆம் தேதி முகம் சிதைந்த நிலையில் மோட்டார் அறையில் இறந்து கிடந்தார். தகவலின் பேரில் வந்து உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசாரின் விசாரணையில், பெரிய பள்ளபட்டியை சேர்ந்த பிரவீன்குமார், பார்த்திபன், தனசீலன் ஆகிய மூவரை கைது செய்தனர். இதில், கல்லூரியில் பணியாற்றிய மாமியாருடன் தகாத உறவு இருந்ததாக கூறப்படுகிறது. கண்டித்தும் கேட்காததால், மது அருந்த அழைத்துவந்து, கொலை செய்துள்ளனர்.