வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி.. நேரம் பார்த்து புகுந்த இளைஞர் - ஊரே கேட்க வந்த அலறல் சத்தம்

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில், வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் கத்தியை காட்டி மிரட்டி 3 சவரன் தங்கச் சங்கிலியை பறித்து சென்ற இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர். குறிஞ்சி நகரில் வீட்டில் இருந்த மூதாட்டி சிவானந்தத்தை கத்தியை காட்டி மிரட்டிய இளைஞர், அவரது தங்கச் சங்கிலியை பறித்துள்ளார். தொடர்ந்து அவரது கம்மலை பறிக்க முயன்ற போது, மூதாட்டியின் காது அறுந்ததில் வலியில் அவர் அலறியுள்ளார். இதனால், தங்க சங்கிலியுடன் இளைஞர் தப்பிய நிலையில், மூதாட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

X

Thanthi TV
www.thanthitv.com