திமுக நிர்வாகி வீடு மீது பெட்ரோல் குண்டு வீச்சு - சிக்கியதும் இளைஞர் எடுத்த முடிவு

x

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே, இரு இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்டதால் ஏற்பட்ட தகராறில், சமரசம் செய்த திமுக நிர்வாகி வீடு உட்பட 2 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெட்ரோல் குண்டு வீச்சில் ஈடுபட்ட இளைஞரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்த நிலையில், அந்த இளைஞர் தன் கையை தானே கத்தியால் வெட்டியதால், பரபரப்பு ஏற்பட்டது. அந்த இளைஞர் மணிபாண்டி என தெரிய வந்துள்ள நிலையில், பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்