ரூ.340 கோடியில் புதிய மருத்துவக் கல்லூரி - அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் பழனிசாமி
திண்டுக்கல் மாவட்டம் அடியனூத்தில் 340 கோடி மதிப்பில் அமையவுள்ள புதிய மருத்துவக் கல்லூரிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
திண்டுக்கல் மாவட்டம் அடியனூத்தில் 340 கோடி மதிப்பில் அமையவுள்ள புதிய மருத்துவக் கல்லூரிக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். பூமி பூஜைக்கு பிறகு, முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகிய இருவரும், செங்கலை எடுத்து வைத்து, கட்டட பணியை தொடங்கி வைத்தனர். அடிக்கல் நாட்டு விழாவில், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
