Dindigul | ஒரே இடத்தில் அடுத்தடுத்து பயங்கரம்.. திடீரென மக்கள் செய்த செயலால் பரபரப்பு

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் ஒளி பிரதிபலிக்கும் ஸ்டிக்கர்களை அமைக்க கோரி சாலை மறியலில் ஈடுபட முயன்ற பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது. கோபால்பட்டி பகுதியில் சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் கார் மோதி இரண்டு பேர் காயம் அடைந்தனர். இதே தடுப்பு சுவரில் கடந்த 30ஆம் தேதி அரசுப்பேருந்து ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானது. இந்நிலையில் முறையான எச்சரிக்கை பலகை அமைக்க கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com