"புரோட்டா கெட்டுப்போச்சுனு தோசை வாங்குனேன் சாம்பார்ல புழு".. ஹோட்டல் சென்றவரை துரத்தி துரத்தி வந்த ஏழரை

"புரோட்டா கெட்டுப்போச்சுனு தோசை வாங்குனேன் சாம்பார்ல புழு".. ஹோட்டல் சென்றவரை துரத்தி துரத்தி வந்த ஏழரை
Published on

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் உள்ள பிரபல சைவ உணவகத்தில் வழங்கப்பட்ட உணவில் புழு இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...

ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்திற்கு எதிர் புறமாக உள்ள உயர் தர சைவ உணவகத்திற்கு சென்ற சுரேஷ் என்ற விவசாயி புரோட்டா வாங்கியுள்ளார்... ஆனால் அது கெட்டுப் போயிருந்ததாகக் கூறப்படுகிறது... அடுத்து தோசை வாங்கிய நிலையில் தோசையிலும் சாம்பாரிலும் புழு இருந்ததாகக் கூறப்படுகிறது... இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ் கடை ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்தார்... தொடர்ந்து புழு இருந்த உணவிற்கு பணமும் கடை ஊழியர்கள் வாங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது... இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பரவி வருகிறது... தரமற்ற உணவு தரும் உணவகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com