Dindigul | Crime | சர்வேயர் மீது சரமாரி தாக்குதல் | காரணத்தை கேட்டு அதிர்ந்த மனைவி

சர்வேயர் மீது சரமாரி தாக்குதல் | காரணத்தை கேட்டு அதிர்ந்த மனைவி

Dindigul | Crime | சர்வேயர் மீது சரமாரி தாக்குதல் | காரணத்தை கேட்டு அதிர்ந்த மனைவி #dindigul #crime #TNPolice #thanthitv திருமணத்தை மீறிய உறவு - அரசு அதிகாரியை கடத்தி கொலைவெறி தாக்குதல் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே, திருமணத்தை மீறிய உறவு விவகாரத்தில் ஆத்தூர் வருவாய்த்துறை சர்வேயரைக் கடத்தி கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்ட கும்பலைத் தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர். ஆத்தூர் சர்வேயர் காஞ்சிக்குமாருக்கும், வீரக்கல் கிராமத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும் இடையே தொடர்பு இருந்ததாகக் கூறப்படும் நிலையில், பெண்ணின் கணவர் முனியாண்டி மற்றும் உறவினர்கள் வாட்ஸ்அப் மூலம் காஞ்சிக்குமாரை வரவழைத்து வீலிநாயக்கன்பட்டி காட்டுப் பகுதிக்கு கடத்திச் சென்று இரும்பு கம்பியால் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதற்கிடையே, கணவரை காணவில்லை என காஞ்சிக்குமார் மனைவி அளித்த புகாரின் பேரில் விரைந்து செயல்பட்ட தனிப்படை காவல்துறையினர், இரவோடு இரவாகக் வீலிநாயக்கன்பட்டி பகுதியில் கும்பலால் தாக்கப்பட்டு கொண்டிருந்த சர்வேயரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், தாக்குதலில் ஈடுபட்ட பெண்ணின் கணவர் முனியாண்டி உட்பட 3 பேரை கைது செய்துள்ள போலீசார், தலைமறைவான மேலும் இருவரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com