கொடைக்கானல் நகரில் உள்ள நட்சத்திர ஏரியில் உள்ள படகு இல்லத்தின் உரிமத்தை ரத்து செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். நீதிமன்ற உத்தரவின்படி, நீர்நிலை, புறம்போக்கு நிலங்களில் குத்தகைக்கு இடம் வழங்க இயலாது என அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து வருவாய்த் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ஆட்சியரின் உத்தரவு நகல் கிடைத்தவுடன் , இடத்தை அளவு செய்து அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றனர்.