மரத்தின் நடுவில் இருந்து குலை தள்ளிய வாழை - ஆச்சரியத்துடன் மரத்தை பார்த்து செல்லும் மக்கள்

திண்டுக்கல் அருகே மரத்தின் நடுவில் இருந்து குலை தள்ளிய அதிசய வாழை மரத்தை மக்கள் ஆர்வத்துடன் வந்து பார்த்து செல்கின்றனர்.
மரத்தின் நடுவில் இருந்து குலை தள்ளிய வாழை - ஆச்சரியத்துடன் மரத்தை பார்த்து செல்லும் மக்கள்
Published on

திண்டுக்கல் அருகே மரத்தின் நடுவில் இருந்து குலை தள்ளிய அதிசய வாழை மரத்தை மக்கள் ஆர்வத்துடன் வந்து பார்த்து செல்கின்றனர். ஒட்டன்சத்திரம் அருகே உள்ள பெரிய கரட்டுப்பட்டியை சேர்ந்த சீனிவாசன் தன் வீட்டில் ரஸ்தாலி ரக வாழை மரத்தை வளர்த்து வருகிறார். இந்த மரத்தின் நடுப்பகுதியில் இருந்து வாழை குலை தள்ளிய நிலையில் இது அப்பகுதி முழுக்கவே வேகமாக பரவியது. இதையடுத்து அந்த அதிசய மரத்தை மக்கள் ஆர்வத்துடன் வந்து பார்த்து செல்கின்றனர். மரத்தில் சத்து குறைபாடு ஏற்படும் போது இதுபோன்ற சம்பவங்கள் நடக்க வாய்ப்புள்ளதாக வேளாண்மைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com